fbpx

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்…!

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உடல்நலக்குறைவால் காலமானார் .

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார் . இவரது இயற்பெயர் பி.சௌந்தர்ராஜன். சிறுகதைகள், நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைக்கதைகள் எழுதிவரும் இவர் தமிழ் வாசகர்களால் நன்கு அறியப்பட்டவர். மதுரையில் வசித்து வந்த அவர் உடல்நலக்குறைவால் காலமானார்.

இவர் தென்னிந்திய இந்துமத பாரம்பரியம் மற்றும் புராண இதிகாசங்களைக் கலந்து எழுதுவதில் வல்லவர். இவருடைய கதைகள் பொதுவாக அமானுட நிகழ்வு, தெய்வீக தலையீடு, மறுபிறவி போன்ற விஷயங்களை உள்ளடக்கியிருக்கும். இவர் கதைகள் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவித்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளன.

இவருடைய கிரைம் ஸ்டோரி மற்றும் இன்றைய கிரைம் நியூஸ் போன்ற பதிப்பாளர்களால் வெளியிடப்படுகின்றன. இவர் எழுதிய “என் பெயர் ரங்கநாயகி” எனும் நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் மூன்றாம் பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

English Summary

Noted writer Indira Soundarrajan passed away

Vignesh

Next Post

சர்ச்சை பேச்சால் நடிகை கஸ்தூரி தலைமறைவு.. செல்போன் ஸ்விட் ஆப்..!! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! 

Sun Nov 10 , 2024
While the police have registered a case, it has been reported that Kasthuri is absconding

You May Like