fbpx

பள்ளியை ஆய்வு செய்யாத அதிகாரிகளுக்கு நோட்டீஸ்…! பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை…!

பள்ளிகளை முறையாக ஆய்வு செய்யாத வட்டார கல்வி அலுவலர்கள் 145 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, பள்ளிகளை ஆய்வு செய்வது மிகவும் அவசியம். அந்த வகையில் 12-க்கும் குறைவான பள்ளிகளை ஆய்வு செய்த வட்டார கல்வி அலுவலர்கள் 145பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களில் ஓய்வு அல்லது மாறுதல் பெற்றவர்கள் தவிர, மற்ற அனைவரும் கட்டாயம் விளக்கம் அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழக பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான ஆய்வை மேற்கொள்ளவும், பள்ளிகளை பார்வையிட்டு மாணவர்களின் கல்வி திறன்களை மேம்படுத்தவும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குறைந்தபட்சம் 12 பள்ளிகளை பார்வையிடவும், 2 பள்ளிகளில் ஆய்வு செய்யவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. கடந்த செப்டம்பரில் அவர்கள்ஆய்வு செய்த விவரங்களை ‘எமிஸ்’தளம் வாயிலாக பதிவு செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டது. அந்த விவரங்களை கண்காணித்ததில், வட்டார கல்வி அலுவலர்கள் பலரும் 12-க்கும் குறைவான பள்ளிகளை மட்டுமே ஆய்வு செய்தது தெரியவந்துள்ளது.

பள்ளிகளை சரிவர பார்வையிடாவிட்டால், மாணவர்களின் கற்றல் அடைவு திறன் குறையும். எனவே, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, பள்ளிகளை ஆய்வு செய்வது மிகவும் அவசியம். அந்த வகையில் 12-க்கும் குறைவான பள்ளிகளை ஆய்வு செய்த வட்டார கல்வி அலுவலர்கள் 145பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களில் ஓய்வு அல்லது மாறுதல் பெற்றவர்கள் தவிர, மற்ற அனைவரும் கட்டாயம் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Notice to authorities not inspecting school

Vignesh

Next Post

பலி எண்ணிக்கை 140ஆக உயர்வு!. பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து கோர விபத்து!. நைஜீரியாவில் அதிர்ச்சி!

Thu Oct 17 , 2024
More Than 140 People Killed When Gasoline Tanker Explodes in Nigeria

You May Like