fbpx

குட் நியூஸ்…! இனி இவர்களும் அரசு பணி, பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள்…! தமிழக அரசு அரசாணை..

தேசிய திறந்தநிலை பள்ளியில் வழங்கப்படும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி, பதவி உயர்வுக்கு தகுதியானவை” என தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தேசிய திறந்தநிலை பள்ளியில் 10, 12-ம் வகுப்பு தேர்வெழுதி பெறப்படும் தேர்ச்சி சான்றிதழ்கள், தமிழக பள்ளிக் கல்வித் துறை வழங்கும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்களுக்கு இணையானவை என்று ஏற்கப்படுகிறது. அதனால், தேசிய திறந்தநிலை பள்ளி தரும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியானவை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் வெளியிட்ட அரசாணையில்; மறுபரிசீலனை செய்ததில் தேசிய திறந்தநிலை பள்ளியில் 10, 12-ம் வகுப்பு தேர்வெழுதி பெறப்படும் தேர்ச்சி சான்றிதழ்கள், தமிழக பள்ளிக் கல்வித் துறை வழங்கும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்களுக்கு இணையானவை என்று ஏற்கப்படுகிறது. அதனால், தேசிய திறந்தநிலை பள்ளி தரும் 10, 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியானவையாகும். உயர்கல்வி, மனிதவள மேலாண்மைத் துறைகளின் ஒப்புதலுடன் இந்த உத்தரவு வெளியிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Now these people are also eligible for government job and promotion

Vignesh

Next Post

முதல் Mpox தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்!. 18 வயது மேற்பட்டவர்களுக்கு வழங்கலாம்!

Sat Sep 14 , 2024
WHO approves first Mpox vaccine for limited use in select countries

You May Like