இந்திய தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் சிக்கியதால் அவரது உடல் சில கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவமானது சுல்தான்புரி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சென்று கொண்டிருந்துள்ளார். அவரின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த நிலையில் காரில் இருந்தவர்கள் மது போதையில் இருந்ததால், சிறுமியை 7-8 கி.மீ காரிலே தூரம் இழுத்து சென்றுள்ளனர். அவர் இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், கஞ்சவாலா பகுதியில் அவரது உடல் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.
போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தியதாக 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து காரை பறிமுதல் செய்தனர்.
மது போதையில் இளம்பெண்ணை காரில் இடித்தது கூட அரியாமல் இழுத்து சென்று, முற்றிலும் நிர்வாணமாக சாலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.