உலகில் உள்ள மனிதர்களுக்கு பலவகையான ரத்த பிரிவுகள் இருக்கிறது. இந்த இரத்தப் பிரிவுகள் ஆர்எச் காரணியின் அடிப்படையில் தாய் மற்றும் தந்தையின் ஜீன் மூலமாக நிர்ணயமாகிறது. ரத்த பிரிவுகளின் அடிப்படையில் சில உணவுகளை எடுத்துக் கொள்வதும் தவிர்ப்பதும் நமது உடலின் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று ஓ குரூப் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் இரத்த பிரிவை கொண்டவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன என்று பார்ப்போம்.
ஓ ரத்த பிரிவை கொண்டவர்கள் குளூட்டன் வகை உணவுகள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் சோள வகைகள் அரிசி உணவுகள், பருப்புகள் மற்றும் சிறுதானியங்கள், ராஜ்மா, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் ஓ இரத்தப் பிரிவை கொண்டவர்கள் அதிகம் புரதங்கள் நிறைந்த உணவு இறைச்சி மீன் மற்றும் சிக்கன் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நம் இரத்த வகையின் அடிப்படையில் உணவை எடுத்துக் கொள்வதும் உணவை தவிர்ப்பதும் நமது உடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானம் தொடர்புடையதாகும். நமது ரத்தத்தில் இருக்கும் வேதிப்பொருட்களுடன் இந்த உணவின் மூலக்கூறுகள் ஒத்துப் போகும்போது உணவு செரிமானம் அடைவது எளிதாகிறது. இதன் அடிப்படையிலேயே எந்த உணவு எடுக்க வேண்டும் எந்த உணவுகளை அதிகம் தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது முடிவு செய்யப்படுகிறது.