fbpx

’இன்ஸ்டாவில் ஆபாச பேச்சு’..!! ’மன அழுத்தத்தின் உச்சகட்டம்’..!! வேதனையை பகிர்ந்த நடிகை நமீதா..!!

நடிகை நமீதா அண்மையில் பிரபல யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், வாழ்க்கையில் அவரை பாதித்த சில விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ”ஒரு கட்டத்தில் நான் உடல் எடை அதிகரித்து, பயங்கரமான மன அழுத்தத்தில் இருந்தேன். நம்முடைய உடம்பில் என்ன பிரச்சனை இருக்கிறது, எவ்வளவு ஹார்மோனல் இம்பேலன்ஸ் இருக்கிறது என்பது மற்றவர்களுக்கு தெரியாது. இப்போது யாரிடமாவது சென்று, இதைச் சொல்லும்போது அதுவா, அது சாதாரண விஷயம்தானே என்று சொல்கிறார்கள். ஆனால், பெண்ணின் உடல் அமைப்பானது, ஆண்களுடைய உடல் அமைப்போடு ஒப்பிடுகையில் மிக மிக சிக்கலானது.

இது எனக்கு கடுமையான மன அழுத்தத்தை கொடுத்தது. 2013இல் நான் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தேன். அப்போது நான் மன அழுத்தத்தின் உச்சகட்டத்தில் இருந்தேன். நான் அப்போது மேக்கப் கூட போட்டுக்கொள்ளவில்லை. இதையடுத்து, அடுத்த நாள் மாலை தினசரி நாளிதழிலோ அல்லது ஏதோ ஒரு வார பத்திரிக்கையிலோ, என்னுடைய புகைப்படத்தை மிகவும் குளோசப் ஆக பதிவிட்டு, என்னென்னமோவெல்லாம் எழுதினார்கள். அது எனக்கு மிக வருத்தமாக இருந்தது.

இதையடுத்து, உங்களுக்கு நான் யார் என்பதை காண்பிக்கிறேன் என்று சொல்லி, கிட்டத்தட்ட 25 கிலோ வரை உடல் எடையை குறைத்தேன். அது முழுக்க முழுக்க, என்னுடைய ஆத்ம திருப்திக்காக நான் செய்தது. அது நான் யார் என்பதை எனக்கு நான் நிரூபிக்க வேண்டும் என்பதற்காக செய்தேன். தற்போது அனைவரிடமும் இலவசமாக இன்டர்நெட் கனெக்சன் இருக்கிறது. அதனால் அவர்கள் என்ன மனதில் நினைக்கிறார்களோ, அதையெல்லாம் இங்கு வந்து கொட்டுகிறார்கள். அப்படிப்பட்ட கமெண்ட்களை பதிவிட்டவர்கள் மீது புகார் கொடுக்கலாம் என்று கணவர் கூறினார்.

ஆனால் நான் அவரிடம், விடுங்கள் என்று சொல்லிவிட்டேன். சில ஆண்டுகளுக்கு முன்பாக இன்ஸ்டாகிராமில் ஒருவர் என்னிடம் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் பேசினார். நான் அவரிடம், நான் நீங்கள் சொல்வதை செய்யவே இல்லையே, நீங்கள் எப்படி சொல்லலாம் என்ற கேட்டேன். பின்னர் நான் அவரது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அவரைப் பற்றி மிகப்பெரிய பதிவை வெளியிட்டு, புகாரையும் கொடுத்திருந்தேன். இப்போது அவர் என்னை ப்ளாக் செய்துவிட்டார். ஆனாலும், அவர் அனுப்பிய பதிவுகள் இன்னும் என்னிடத்தில் இருக்கின்றன” என்று பேசினார்.

Read More : உங்கள் துணைக்கு செக்ஸில் ஆர்வமே இல்லையா..? அப்படினா இதை டிரை பண்ணி பாருங்க..!!

English Summary

In a recent interview with a popular YouTube channel, actress Namita talked about some of the things that have affected her in life.

Chella

Next Post

நர்மதா நதி ஏன் "கன்னி நதி" என்று அழைக்கப்படுகிறது? முழு விவரம் இதோ!!

Wed Jun 12 , 2024
In Hinduism, there is a tradition of worshiping rivers as they are considered holy. Considered a very important part of the Hindu culture, Rivers are worshipped as mothers.

You May Like