உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் தொடர் கனமழை பெய்த நிலையில், சாலைகளில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு பெருக்கெடுத்து ஓடுகிறது. அதே சமயத்தில் ஒரு ஆண் மற்றும் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் தேங்கியுள்ள தண்ணீரை அங்கிருந்த இளைஞர்கள் அந்த இருவரும் மீது அடித்து துன்புறுத்தினர்.
மழை பெய்யும் சமயத்திலும் கடும் வெள்ளம் சூழ்ந்துள்ள நேரத்தில் இளம்பெண்ணை கொடூரமாக அந்த கும்பல் துன்புறுத்தியது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆணும் பெண்ணும் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்தவர்கள் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடிக்க ஆரம்பித்தனர்.
அதோடு பைக்கை பின்னால் இருந்து அந்த பெண்ணின் ஆடையை பிடித்து இழுத்தனர். இதனால் அவர்கள் வாகனத்தில் இருந்து தடுமாறி, கீழே விழுந்தனர். இதுகுறித்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Read More : முன்பே எச்சரிக்கை விடுத்த ஆய்வுகள்..!! இத்தனை உயிர்போக இதுதான் காரணமா..?