fbpx

ஆயுதபூஜை, தீபாவளி விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்..!! – தெற்கு இரயில்வே

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், அதேபோல் சென்னை – தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” கூட்ட நெரிசலைக் குறைக்க சென்னை – தூத்துக்குடி இடையிலான சிறப்பு ரயிலானது (06186) வரும் 8 ஆம் தேதி இயக்கப்பட்டு, மறுமாா்க்கமாக தூத்துக்குடி – சென்னை இடையிலான சிறப்பு ரயிலானது (06187) வரும் 9 ஆம் தேதி இயக்கப்பட உள்ளது.

சென்னையிலிருந்து 21 பெட்டிகளுடன் இரவு 12.25 மணிக்குப் புறப்படும் இந்த ரயிலானது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவக்கோட்டை, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடிக்கு மறுநாள் பிற்பகல் 1.50 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக தூத்துக்குடியிலிருந்து மாலை 4.15 மணிக்குப் புறப்பட்டு சென்னைக்கு காலை 7.50 க்குச் சென்றடையும்.

ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட விழாக்கால கூட்ட நெரிசலைத் தவிா்க்க திருச்சி – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06190) வரும் 11 ஆம் தேதி முதல் டிசம்பா் 31 வரை (செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு) இயக்கப்பட உள்ளது. மறுமாா்க்கமாக தாம்பரம் – திருச்சி அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06191) வரும் 11 ஆம் தேதி முதல் டிசம்பா் 31 வரை (செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு) இயக்கப்பட உள்ளது.

திருச்சியிலிருந்து மாலை 5.35 மணிக்கு 20 பெட்டிகளுடன் புறப்படும் இந்த ரயிலானது தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு பிற்பகல் 12.30 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக, தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டு திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு வந்தடையும்.” என கூறப்பட்டுள்ளது.

Read more ; கவர்ச்சியில் இருந்து திடீரென ஆன்மீகத்தில் குதித்த தமன்னா..!! வைரலாகும் புகைப்படம்..!!

English Summary

On the occasion of Ayudha Puja and Diwali, a special train will be run between Trichy-Thambaram and also a special train will be run between Chennai and Thoothukudi.

Next Post

Tomato Price : ரூ.100-ஐ தாண்டிய தக்காளி விலை.. விலையை கேட்டு அதிரும் பொதுமக்கள்..!!

Mon Oct 7 , 2024
1 kg of tomato is being sold at Rs.110 as the price of tomatoes continues to rise

You May Like