fbpx

தமிழகமே.. ! 1452.97 கி.மீ நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி…! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!

1452.97 கி.மீ நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி மற்றும் சாலைகளின் 5 ஆண்டு கால தொடர் பராமரிப்பு ரூ.58 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; ஊரக மக்களுக்கு நேரடி தொடர்பு வசதியினை வழங்குவதில் சாலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. போக்குவரத்தில் ஊரகச் சாலைகள் கடைசி இணைப்பாக கருதப்பட்டாலும், ஊரக பகுதி மக்களுக்கு போக்குவரத்து வசதியினை வழங்குவதில் மிக முக்கிய இணைப்பாக ஊரகச் சாலைகள் செயல்படுகின்றன. தமிழ்நாடு, சுமார் 1 இலட்சத்து 37 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட பரந்த சாலைத் தொகுப்பினை கொண்டுள்ளது. ஊரகச் சாலைத் தொகுப்பினை மேம்படுத்தி அதன் மூலம், வசதியினைமாநிலத்தில் உள்ள தொலைதூரப் பகுதிகளுக்கும் சாலை உறுதிப்படுத்தும் தொலைநோக்குப் பார்வையினை இந்த அரசு கொண்டுள்ளது.

இதனை உறுதி செய்யும் வகையில், ஊரகச் சாலைகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்த இந்த அரசு, நபார்டு- ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ் 2024- 25 ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 37 மாவட்டங்களில் 1452.97 கி.மீ நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி மற்றும் அச்சாலைகளின் 5 ஆண்டு கால தொடர் பராமரிப்பு ரூ.58 கோடி மதிப்பீட்டில் அமைக்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின்படி: தருமபுரி மாவட்டத்தில் ரூ. 24.49 கோடி மதிப்பீட்டில், 36.94 கி.மீ நீளமுள்ள 19 சாலைகள், மதுரை மாவட்டத்தில் ரூ. 37.30 கோடி மதிப்பீட்டில், 57.58 கி.மீ நீளமுள்ள 30 சாலைகள்,நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 25.78 கோடி மதிப்பீட்டில், 44.11 கி.மீ நீளமுள்ள 24 சாலைகள்,சிவகங்கை மாவட்டத்தில் ரூ. 35.30 கோடி மதிப்பீட்டில், 58.22 கி.மீ நீளமுள்ள 26 சாலைகள்,கடலூர் மாவட்டத்தில் ரூ. 55.20 கோடி மதிப்பீட்டில், 86.96 கி.மீ நீளமுள்ள 39 சாலைகள்,திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரூ. 50.72 கோடி மதிப்பீட்டில், 91.88 கி.மீ நீளமுள்ள 39 சாலைகள், கரூர் மாவட்டத்தில் ரூ. 41.26 கோடி மதிப்பீட்டில், 92.54 கி.மீ நீளமுள்ள 46சாலைகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ. 10.96 கோடி மதிப்பீட்டில், 11.42 கி.மீ நீளமுள்ள 7 சாலைகள் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 60.08 கோடி மதிப்பீட்டில், 73.08 கி.மீ நீளமுள்ள 38 சாலைகள், விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 40.03 கோடி மதிப்பீட்டில், 74.39 கி.மீ நீளமுள்ள 39 சாலைகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 12.29 கோடி மதிப்பீட்டில், 19.03 கி.மீ நீளமுள்ள 10 சாலைகள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ. 9.77 கோடி மதிப்பீட்டில், 18.41 கி.மீ நீளமுள்ள 11 சாலைகள், தென்காசி மாவட்டத்தில் ரூ. 15.58 கோடி மதிப்பீட்டில், 32 கி.மீ நீளமுள்ள 14 சாலைகள், தேனி மாவட்டத்தில் ரூ. 10.44 கோடி மதிப்பீட்டில், 20.20 கி.மீ நீளமுள்ள 12சாலைகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.14.83 கோடி மதிப்பீட்டில், 29.57 கி.மீ நீளமுள்ள 17 சாலைகள்,திருப்பூர் மாவட்டத்தில் ரூ. 31.05 கோடி மதிப்பீட்டில், 60.20 கி.மீ நீளமுள்ள 33 சாலைகள் உள்ளிட்ட திட்டங்கள் என 37 மாவட்டங்களில் 1,452.97 கி.மீ நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

அச்சாலைகளின் 5 ஆண்டு கால தொடர் பராமரிப்பு ரூ.58 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சாலைகள் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

ordered the construction of 746 roads measuring 1452.97 km at a cost of Rs. 804.59 crore and the continuous maintenance

Vignesh

Next Post

தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச்சூடு!. 40 விவசாயிகள் சுட்டுக்கொலை!. நைஜீரியாவில் பயங்கரம்!.

Wed Jan 15 , 2025
Terrorists open fire!. 40 farmers shot dead!. Terror in Nigeria!.

You May Like