தெருக்கள் மற்றும் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூராக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்கும் பொருட்டு தெரு மற்றும் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியானது மாநகராட்சி வாகனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
முதல் தடவை பிடிபட்ட மாட்டின் உரிமையாளர் ரூ.10,000/- அபராதம் செலுத்தி மாட்டை பிடித்துச் செல்ல வேண்டும். அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் பிடிபட்ட மாடுகள் மாநகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டு அத்தொகை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும்.
மேலும், பிடிபட்ட மாடுகள் மீண்டும் தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றினால் மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவிட்டார்.