கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியை அடுத்துள்ள தாழங்குடா மீனவகிராமத்தில் மதியழகன் மற்றும் மதிவாணன் உள்ளிட்ட இருவருக்கிடையே ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் கடந்த 2020 ஆம் வருடம் மதிவாணன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
மதிவாணனின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை மதியழகன் நஞ்சுக்குப்பம் பகுதியில் இருக்கின்ற சிவன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக நடந்த சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்து உள்ளது உயிர் பயத்தால் அவர்களிடமிருந்து தப்பிக்க மதியழகன் வேகமாக ஓட தொடங்கினார். ஆனால் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தி சென்று சரமாரியாக வெட்டினர் இதில் மதியழகன் முகம் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே துடித்துடித்து உயிரிழந்தார். இதனையடுத்து கொலை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
பட்டப்பகலில் காலை வேளையில் நடு ரோட்டில் நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த சம்பவம் குறிப்பு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதோடு முன்விரோதம் காரணமாக, இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் பதக்கம் நிலவி வருவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.