fbpx

இரவு முழுவதும் மகனை தேடி அலைந்த பெற்றோர்….! காலையில் ,தூக்கில் பிணமாக தொங்கிய மகன், கதறிய குடும்பத்தினர்…!

சேலம் அருகே, உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறி, வெளியே சென்ற மகன், மறுநாள் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சேலத்தில், குணால் என்ற 21 வயது இளைஞர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் தன்னுடைய பாட்டி வீட்டிற்கு போய் வருவதாக தெரிவித்துவிட்டு ,வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்

இரவு வெகு நேரம் ஆன பின்னரும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள், குணாலை காணவில்லை என்று பல்வேறு பகுதிகளில் தேடி உள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இதனால், குணாலின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் ,மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தனர்.

இப்படியான சூழ்நிலையில்தான், நேற்று விடியற்காலை,எட்டிக்குட்டைமேடு பகுதியில் இருக்கின்ற, ஒரு கல்லூரி வளாகத்தில், குணால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், பிணமாக கிடந்துள்ளார்.

இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, குணாலின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இது பற்றி குணாளின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்து கொண்ட குணாலின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், பதறிப்போய்  மருத்துவமனைக்கு ஓடினர். அங்கே, குணால் ,உடலை பார்த்த அவருடைய பெற்றோர்கள், உறவினர்கள் என்று அனைவரும் கதறி அழுதது காண்போரின் கண்களை கலங்க வைக்கும் விதமாக இருந்தது.

இது பற்றி, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, குணால் உயிரிழந்தது, கொலையா? அல்லது தற்கொலையா? காதல் விவகாரம் குறித்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று, பல்வேறு விதத்திலும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

”நாங்கள் அந்த செய்தியை வெளியிடவே இல்லை”..!! அண்ணாவை விமர்சித்து பொய் செய்தியை பரப்பிய அண்ணாமலை..?

Thu Sep 21 , 2023
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டு எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என்று பல அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதை பயன்படுத்திய பாஜ மேலிடம் அவர்களின் மேல் உள்ள ஊழல் வழக்குகளை காட்டி மிரட்டி தங்கள் எடுக்கும் முடிவுக்கு பணிய வைத்து வருகிறது. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் அதிமுக கூட்டணி வேண்டாம் என்பது போல பேசத்தொடங்கினார். ஒரு கட்டத்தில் ‘ஜெயலலிதாதான் மிகப்பெரிய ஊழல் […]

You May Like