தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள பிரசாத் (32) மற்றும் அனிஷா (25) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. சில நாட்களில் பிரசாத் மனைவியை தனது பெற்றோரிடம் விட்டு விட்டு , குவைத்துக்கு சென்றுள்ளார்.
இவர்களின் திருமணத்தின் போது 70 சவரன் நகையுடன் ரூ.4 லட்சம் ரொக்கம் சேர்த்து வரதட்சணையில் முதல் தவணையாக அனிஷா தந்தை கில்பர்ட் கொடுத்துள்ளார். மீதி இருக்கும் 30 சவரன் நகையை அடித்த சில மாதங்களில் கொடுத்து விடுவதாக உறுதியளித்த நிலையில், அந்த 30 சவரன் நகையை போடவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையில், அனிஷாவின் பெற்றோர் தங்களது மகளை வாரத்திற்கு ஒரு முறையாவது தங்களது வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு பிரசாத்தின் பெற்றோரிடம் கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு பிரசாந்த மறுப்பு தெரிவித்து விட்டார். இந்த நிலையில் சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து பிரசாத் ஊருக்கு வந்திருந்தார்.
நேற்றைய முன் தினத்தில் கில்பர்ட் குடும்பத்தாருக்கு, உங்களது மகள் தூக்குப்போட்டு கொண்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் என்று தொலைபேசியில் தகவல் வந்துள்ளது.
தகவலின் பேரில் அனிஷா குடும்பத்தார் மருத்துவமனை சென்றபோது மகள் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து பிரசாத் குடும்பத்தார் கொலை செய்துள்ளதாகவும் மேலும் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டி பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.