fbpx

பாராளுமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் களமிறங்கும் விசிக.? தொகுதி பங்கீடு குறித்து திருமாவளவன் பேட்டி.!

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான ஆயத்த பணிகள் இப்பொழுதும் புறமாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி உருவானது .

இந்தக் கூட்டணியில் சில முக்கிய கட்சிகள் விலகினாலும் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா கூட்டணியில் தமிழகத்தைச் சார்ந்த திமுக விடுதலை சிறுத்தைகள் மதிமுக போன்ற மாநில கட்சிகளும் இடம் பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இந்தியா கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தையில் திமுகவின் தேர்தல் குழு ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில் காங்கிரசுடன் திமுக தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதனை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து திமுக தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது . இந்த பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் திமுகவிடம் 4 தொகுதிகள் கேட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

3 தனித் தொகுதிகளிலும் 1 பொது தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் விசிக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் திமுக தேர்தல் குழுவிடம் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக உடன் பேச்சுவார்த்தை முடிந்த பின் இது பற்றிய முழு விவரங்களையும் அறிவிப்பதாக தொல் திருமாவளவன் கூறியிருக்கிறார்.

Next Post

"செல்போன்களை அடிக்கடி எடுத்துப் பார்ப்பது இந்தியர்களின் வழக்கமாக இருக்கிறது.." 'BCG' அறிக்கை.!

Mon Feb 12 , 2024
இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி தங்கள் செல்போன்களை கைகளில் எடுத்து பார்ப்பதாக புதிய ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மேலும் இதில் பெரும்பாலானவர்களுக்கு ஏன் செல்போனை கையில் எடுத்தோம் என்று தெரியவில்லை எனவும் அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. இதனை அவர்கள் தங்கள் பழக்கத்தின் காரணமாக செய்வதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆய்வு முடிவுகளை உலகளாவிய மேலாண்மை ஆலோசனை நிறுவனமான பாஸ்டன் கன்சல்டிங் குரூப் வெளியிட்டுள்ளது. இந்த […]

You May Like