இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அவர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று நாளை எட்டியது. 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறோம். கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட போராட்டத்தில் தனிக்குழு அமைத்து சரிசெய்வதாக அரசு சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் கோரிக்கை மீது முதல்வர் உறுதியான வாக்குறுதி வழங்கும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் மூன்று கட்ட பேச்சுவார்த்தையையும் நடத்தப்பட்டது ஆனால் இந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர்; இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்படும். அதே போல பகுதி நேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக ரூ.2500 ஊதியம் வழங்கப்படும். தொழிற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.