fbpx

’மக்களே கவனமா இருங்க’..!! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றம்..!! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!!

தொடர் கனமழையால் நிரம்பிய செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட ஏரிகள் வெகுவாக நிரம்பியுள்ளன. இன்று காலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

’மக்களே கவனமா இருங்க’..!! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றம்..!! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!!

இதேபோல், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து காலை 9 மணிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Chella

Next Post

மீண்டும் ஒரு புயல் சின்னமா? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Mon Dec 12 , 2022
சென்ற வாரம் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திடீரென்று புயலாக உருவெடுத்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் புயல் என்று பெயரிடப்பட்டது. இந்த புயலின் காரணமாக, கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது.மேலும், இந்த புயல் காரணமாக, பெய்த மழையால் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய சேதங்களை விளைவித்து சென்றிருக்கிறது இந்த புயல். இந்த நிலையில் தான் வட உள் தமிழகத்தின் மேல் […]

You May Like