சேலம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க தாட்கோ மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க திட்டத்தொகை ரூ.3.00 இலட்சத்திற்கு தாட்கோ மானியமாக ரூ.90,000/- வழங்கப்படுகிறது. தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளில் 80 ஆதிதிராவிடர்களுக்கும், 20 பழங்குடியினருக்கும் வழங்கப்படும். தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் மானியம் ரூ.90.00 இலட்சம், வங்கி கடன் ரூ.195 கோடி என முடிவு செய்யப்பட்டு சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 2 ஆதிதிராவிடர்களுக்கு மானியம் ரூ.90,000 வீதம் ரூ.180 இலட்சம் ஆகவும், பழங்குடியினர் 1 நபருக்கு தலா ரூ.90,000 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிபந்தனைகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும், வயது 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் 3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். GST/ PAN card / Address proof இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தில் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது.
தாட்கோவின் மாவட்ட அளவிலான தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்ட பின் சிமெண்ட் முகவருக்கான விண்ணப்பங்கள் நிறுவனம் மூலம் பெற்று வழங்கப்படும். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தாட்கோ மூலம் ரூ.5,000 வைப்புத் தொகை நிறுவனத்திற்கு செலுத்தப்படும்.