தற்போது நடந்து வரும் அரசியல் பிரச்சினையின் காரணமாக இந்தியர்கள் பலரும் லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்ல விருப்பப்பட்டு வருகின்றனர். அப்படி செல்ல விரும்புபவர்கள் லட்சத்தீவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் மற்றும் அங்குள்ள நடைமுறைகள் என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்
இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவு அரபிக் கடலில் அமைந்துள்ளது. இந்தியாவின் அழகான, அமைதியான இடங்களில் ஒன்றுதான் லட்சத்தீவு. மேலும் லட்சத்தீவிலையே 36 தனித்தனி தீவுகள் உள்ளன. ஆனால் ஒரு சில தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக மினிகாய் தீவு, கல்பேனி தீவு, கத்மத் தீவு, திண்ணகர தீவு, பங்கார தீவு ஆகியவை லட்சத்தீவில் அமைந்துள்ள அழகான சுற்றுலா தலங்களாக கருதப்பட்டு வருகிறது. பரபரப்பான நகர சுற்றுச்சூழலில் இருந்து விடுபட்டு அமைதியான சூழ்நிலையை கொண்ட லட்சத்தீவில் விடுமுறையை கழிக்க பலரும் விரும்பி வருகின்றனர்.
லட்சத்தீவிற்கு செல்வதற்கு என்னென்ன விதிமுறைகள்
1. லட்சத்தீவிற்கு செல்வதற்கு பெர்மிட் பாஸ் ( permit pass) கட்டாயம். பெர்மிட் பாஸ் பெறுவதற்கு கொச்சியில் இருக்கும் லட்சத்தீவு அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.
2. லட்சத்தீவிற்கு செல்ல வேண்டுமென்றால் அதிகமாக லக்கேஜ்களை எடுத்துச் செல்லக்கூடாது. கொச்சியில் இருந்து லட்சத்தீவு செல்லும் விமானங்கள் வழக்கமான விமானத்தை விட சிறியதாகவே இருக்கும் இதனால் அதிகமான லக்கேஜ்களை எடுத்துச் செல்ல கட்டுப்பாடு உண்டு.
3. கப்பல்கள் மூலமும் இலட்சத்தீவிற்கு செல்லலாம். மேலும் தற்போது மார்ச் மாதம் வரை விமான டிக்கெட் விற்று தீர்ந்து விட்டது என்பதால் ஏப்ரல் மாதத்திற்கு மேல் தான் லட்சத்தைவிற்கு செல்ல முடியும்.