fbpx

மக்களே..!! இன்றும், நாளையும் வெளுத்து வாங்கப்போகும் மழை..!! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!!

இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் பரவலாக மழை பெய்யும் என்று புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்று முதல் 27ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என்பதால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய வடக்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகளிலும் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More : ”நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட் தான் இது”..!! ராகுல் காந்தி கடும் விமர்சனம்..!!

English Summary

The Meteorological Department has announced that there will be widespread rain in Tamil Nadu today and tomorrow.

Chella

Next Post

வண்டியின் நம்பரை வைத்து இதெல்லாம் பண்ணலாமா..? வாகன ஓட்டிகளே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Tue Jul 23 , 2024
In this post, you can see how to get the information of a vehicle by its number.

You May Like