சில காலங்களாக பிரித்தானியாவில் உணவுகளின் விலையானது பல மடங்காக அதிகரித்த நிலையில், மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பல குடும்பங்கள் அரசாங்க உதவியினையே நம்பி வாழ்ந்து வருவதாக மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், பிரித்தானியா பகுதியில் வாழும் நடுத்தர மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது. இவ்வாறு இருக்கையில் லண்டனில் உள்ள, டெஸ்கோ சூப்பர் மார்கெட் ஒன்றில் நடந்த விஷயம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதனை தொடர்ந்து இந்ந காணொளியில் இருப்பவர்கள் விலை குறைக்கப்பட்ட உணவு பொருள்களை பெற்றுக் கொள்வதற்காக அவர்களுக்குள்ளே அடிதடியில் ஈடுபட்டுள்ளதாக அறியப்படுகிறது. மேலும் டெஸ்கோ சூப்பர் மார்கெட்டில், மஞ்சள் நிற ஸ்டிக்கர் ஒட்டிய விலை குறைந்த உணவுப் பொருட்கள் ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.
அப்போது அந்த இடத்திற்கு முண்டி அடித்து ஓடிய மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு, உணவுகளை எடுத்துக் கொண்டனர். இதில் சிறுமி ஒருவர் மாட்டிக் கொண்டதை கூடப் பாரமல் அவரையும் தள்ளி விட்டு, உணவை எடுத்துக் கொள்ள மக்கள் முனைந்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.