ஆட்சிகள் மாறினாலும் மக்கள் நல பணியாளர் திட்டம் தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்ப வழங்கி உள்ளது..
மக்கள் நல பணியாளர்கள் பிரச்சனை என்பது தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது.. திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலப்பணியாளருக்கு பணி கொடுக்கப்படு.. அதிமுக ஆட்சிக்கு வரும் போது அவர்களின் பணி நீக்கப்படும்.. இதுவே தமிழகத்தில் இருந்து வரும் நடைமுறையாக உள்ளது.. அப்படி கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சுமார் 13,500 மக்கள் நல பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.. இதை எதிர்த்து மக்கள் நல பணியாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது..
இதனிடையே, தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன், அதிமுக ஆட்சியில் இருந்து பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது… குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.7,500 ஊதியம் வரும் வகையில் வேலை வழங்கப்படும். பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகு கடந்த பத்து ஆண்டுகளில் இறந்து போன மக்கள் நலப்பணியாளர்களின் சட்டப்படியான வாரிசுகளுக்கும் வேலை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.. உச்சநீதிமன்றத்திலும் இந்த தகவலை தமிழக அரசு தெரிவித்திருந்தது…
ஆனால் தமிழக அரசின் இந்த ஊதியம் போதுமானதாக இல்லை என்று கூறி மக்கள் நல பணியாளர்களில் ஒரு பிரிவினர் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த லையில் இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.. எக்காரணம் கொண்டு மக்கள் நல பணியாளர் திட்டத்தை நிறுத்த கூடாது என்றும் ஆட்சிகள் மாறினாலும் மக்கள்நல பணியாளர் திட்டம் தொடர வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்..
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போல் மக்கள் நல பணியாளர் திட்டமும் செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.. மக்கள் நல பணியாளர்களின் ஊதியம் தொடர்பான முடிவு என்பது அரசின் கொள்கை சார்ந்த விஷயம்.. அதில் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.