பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சிகூர் அருகே வடக்கு மாதவி ஏரிக்கரை தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கு சத்தியா என்னும் மனைவியும் சுதர்சன் என்ற ஐந்து வயது மகனும் இருந்துள்ளனர். சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் கோவிந்தராஜ் வேலை பார்த்து வந்த நிலையில், மகனுடன் சத்யா தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அனுக்கூர் குடிகாடு பகுதியில் இருக்கும் தனது தந்தை வீட்டிற்கு அவர் மகனுடன் சென்றுள்ளார். நேற்று காலை 10 மணி அளவில் சுதர்சன் காணாமல் போயிருந்தார்.
விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என்று அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சத்யா அங்கும் இங்கும் தேடி அலைந்தார்கள்.
ஆனால் எந்தவித தகவலுமே கிடைக்கவில்லை, இதனை தொடர்ந்து காட்டுப் பகுதியில் சுதர்சனின் செருப்பும், பொம்மையும் கிடந்துள்ளது சிறுவன் உள்ளே விழுந்திருக்கலாம் என்பது தாயின் சந்தேகமாக இருந்தது. எனவே சத்தியா தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, அவர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி தேடிய போது நீண்ட நேர தேடலுக்கு பின் சுதர்சன் பிணமாக மீட்கப்பட்டான். சிறுவனின் உடலை பார்த்து தாயும், உறவினர்களும் கதறி அழுந்துள்ளனர். இதனை தொடர்ந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.