ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதால், வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கூட பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும்.. பிஎஃப் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இபிஎஃப்ஓ வழங்குகிறது.. இபிஎஃப்ஓ அமைப்பில் சுமார் 7 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்..
இந்நிலையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.5%ல் இருந்து 8.1%ஆக குறைக்கப்பட்டது.. 8 சதவீதமாக இருந்த 1977-78-ம் ஆண்டுக்குப் பிறகு இது மிகக் குறைந்த விகிதமாகும் என்று தொழிலாளர் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கு நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கிய நிலையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான 8.1 சதவீத புதிய வட்டி விகிதத்தில் சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைப்பதற்கான பணிகளை இபிஎஃப்ஓ அமைப்பு மேற்கொண்டு வருகிறது..
இந்நிலையில் பிஎஃப் சந்தாதரர்களுக்கு 2021-22 நிதியாண்டிற்கான PF வட்டித் தொகை இந்த மாதம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2020-21 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் கடந்த டிசம்பர் மாதம் கிரெடிட் செய்யப்பட்டது. இந்நிலையில் 2021-22-ம் ஆண்டுக்கான வட்டிப் பணத்தை ஜூலை 15-ம் தேதிக்குள் PF கணக்குகளுக்கு செலுத்த இபிஎஃப் ஓ அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
உங்கள் PF பேலன்ஸை எவ்வாறு சரிபார்க்கலாம்..?
எஸ்எம்எஸ் மூலம் : EPFO உறுப்பினர்கள் UAN மற்றும் EPFO போர்ட்டலில் பதிவு செய்துள்ளவர்கள், EPFOHO UAN ENG என டைப் செய்து மூலம் 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்புவதன் மூலம் இருப்பைச் சரிபார்க்கலாம்.
மிஸ்டு அழைப்பு மூலம் : பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம், அதன் பிறகு அவர்கள் PF கணக்கு இருப்பு விவரங்களுடன் ஒரு SMS பெறுவார்கள்.
UMANG பயன்பாட்டின் மூலம் : உங்கள் UAN மற்றும் OTP மூலம் உள்நுழைந்த பிறகு UMANG செயலியில் உங்கள் PF பாஸ்புக்கை அணுகலாம்.
EPFO இணையதளம் மூலம்
- EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- இப்போது, ‘Our Services’ என்ற டேப்-க்குச் சென்று, ‘For Employees’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- புதிய பக்கத்தில், ‘Member Passbook’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்.
- நீங்கள் உள்நுழைந்ததும், உங்கள் பாஸ்புக் உங்கள் மற்றும் உங்கள் முதலாளியின் பங்களிப்பு மற்றும் அதன் மூலம் பெற்ற வட்டி ஆகிய இரண்டையும் காட்டும்.