fbpx

கொடைக்கானலுக்கு ‘டூர்’ போக போறீங்களா.! இந்த புதிய கட்டுப்பாடுகள் பற்றி கண்டிப்பா தெரிஞ்சிக்கங்க.!

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் தமிழகத்தில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களில் முக்கியமானது. திண்டுக்கல் மாவட்டத்தின் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இந்த கோடை வாசஸ்தலம் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரத்தில் இந்த நகரம் அமைந்திருக்கிறது. பனி படர்ந்து இருக்கும் மலைகள் மற்றும் அடர்ந்த மரங்கள் நிறைந்த வனப்பகுதிகள் கொடைக்கானலில் சிறப்பம்சமாகும்.

இங்கு அமைந்திருக்கும் டால்பின் நோஸ், மலைப்பகுதி, சில்வர் அருவி, பைன் மரக்காடுகள், மலர்கண்காட்சி, ராக் பில்லர் மற்றும் குணா குகை ஆகியவை முக்கியமான சுற்றுலா தலங்கள் ஆகும். கோடை காலங்களிலும் விடுமுறை நாட்களிலும் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்தும் மக்கள் சுற்றுலாவிற்கு வருகை புரிவார்கள். இங்கே முக்கிய சுற்றுலா தளங்களாக உள்ள சில பகுதிகள் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது .

குணா குகை, பெரிஜம் ஏரி, ராக் பில்லர், மோயர் சதுக்கம் மற்றும் பசுமை பள்ளத்தாக்கு ஆகியவை அரசின் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தப் பகுதிகளுக்கு வருகின்ற ஜனவரி மாதம் முதல் நுழைவுக் கட்டணம் விதிக்கப்பட இருக்கிறது. இதன்படி இந்த பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணங்கள் வசூல் செய்யப்பட உள்ளது. இந்த புதிய விதிகளின்படி பேருந்துகளுக்கு நுழைவு கட்டணமாக 100 ரூபாயும் கார் மற்றும் வேன் போன்றவற்றிற்கு நுழைவு கட்டணமாக 50 ரூபாயும் வசூலிக்கப்பட உள்ளது. மேலும் இரு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய் நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய விதிமுறை ஜனவரி 1 2024 முதல் அமல்படுத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Next Post

ஒத்த செடி போதும்.! ஓஹோன்னு வாழ்க்கை மாறும்.! செல்வ வளம் பெருக கருவேப்பிலை செடி எங்கு வைக்க வேண்டும்.?

Thu Dec 14 , 2023
நாம் அனைவரும் வீட்டை அழகு படுத்துவதிலும் பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்துவோம். வீட்டை அழகாக வைப்பதற்காக பூச்செடிகள் மற்றும் மரங்களை வளர்ப்போம். பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு பயன்படும் காய்கறிகளையே செடியாக வளர்ப்பார்கள். இதன் மூலம் அவற்றில் இருந்து வரும் காய்கறிகளைக் கொண்டு அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் நம் வீட்டில் வளர்க்கும் செடிகள் வாஸ்து படி அமைந்திருக்க வேண்டும் என வாஸ்து கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் […]

You May Like