fbpx

“தயவு செய்து இந்த மூன்று உணவுகளை காலை உணவு வேளையில் சாப்பிடாதீங்க.!” மருத்துவர்களின் பகீர் எச்சரிக்கை.!

காலை உணவு அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்று. இரவில் தூங்கி எழுந்தவுடன் காலையில் சாப்பிடும் முதல் உணவு அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய அவசர வாழ்க்கை சூழ்நிலையில் மக்கள் துரித உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் காலையில் உட்கொள்கின்றனர். இதனால் நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுவதோடு 34 வகையான புற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் காலையில் தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் பற்றிய பட்டியலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அவற்றைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆய்வின்படி பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உணவாக உட்கொள்ளும் போது 18 சதவீத மக்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. மேலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை காலை உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு ஏதேனும் ஒருவகை புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர். நாள் காலை உணவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை தவிர்க்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் கழகத்தின் ஆய்வில். 38 பிராண்டுகளில் தயாரிக்கப்படும் 54 வகையான ரொட்டித் துண்டுகளில் புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான மூலக்கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. குறிப்பாக பீசா பர்கர் ஆகியவற்றை தயாரிக்க பயன்படுத்தப்படும் ரொட்டிகளில் பொட்டாசியம் ப்ரோமேட் மற்றும் பொட்டாசியம் அயோடேட் கெமிக்கல் இருக்கின்றன. இதில் பொட்டாசியம் ப்ரோமேட் 28 வகையான புற்று நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. மேலும் பொட்டாசியம் அயோடேட் தைராய்டு பிரச்சினைகளுக்கு முக்கிய பங்கு வைக்கிறது. எனவே இவை கலந்திருக்கும் ரொட்டிகளை காலை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

சுவையூட்டப்பட்ட யோகர்ட் என அழைக்கப்படும் செயற்கை இனிப்புகளை கொண்ட தயிர் வகைகளை தவிர்க்கும் படியும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இவற்றில் அஸ்பார்டேம் என்ற செயற்கை இனிப்பை ஏற்படுத்துவதற்கான வேதியியல் மூலக்கூறு சேர்க்கப்படுகிறது. இவற்றால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து இருக்கிறது எனவே இந்த வேதிப்பொருள் கலக்கப்பட்ட பொருட்களையும் காலை உணவாக சாப்பிடுவதை தவிர்க்கும் படி மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Next Post

இனி டி20 அணியில் விளையாட மாட்டீர்களா?… என்னுடைய டார்கெட் இதுதான்!… ஹிட்மேன் ஓபன் டாக்!

Sat Nov 25 , 2023
ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடரில், இந்திய அணிதான் கோப்பை வெல்லும் என ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனால், அப்படி நடக்கவில்லை. இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று அசைக்க முடியாத அணியாக இருந்தும், பைனலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோற்று, கோப்பையை இழந்தது. இதன்மூலம், 2013-ல் இருந்து ஐசிசி கோப்பைக்கான கனவு நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஒருநாள் உலகக் கோப்பை தற்போது முடிந்துள்ள நிலையில், அடுத்த வருடம் ஜூன் […]

You May Like