தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள திருமங்கலகுறிச்சி என்ற கிராமத்தில் பரமசிவம் என்பவர் தனது மகள் மகேஷ்வரி(17) வசித்து வருகிறார். மகள் கழுகுமலையில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்துள்ளார்.
படிப்பிற்காக அவரது உறவினரின் வீட்டில் தங்கி, பள்ளிக்கு சென்று வந்துள்ளார். சென்ற சில நாட்களுக்கு முன் மகேஷ்வரி தனது சொந்த ஊருக்கு சென்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உறவினர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், அன்றிரவு வீட்டில் மகேஷ்வரி தூக்கிட்ட நிலையில் தொங்கியுள்ளார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் மகேஷ்வரி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டதன் பேரில் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் காவல்துறையினர். அத்துடன் இச்சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.