அயோத்தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடத்த ஜனவரி 22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது பிரதமர் மோடி தலைமை ஏற்று பிரதிஷ்டை நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை ஜாம்பவான்கள் முகேஷ் அம்பானி கௌதம் அதானி உட்பட 7,000-க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று ராமர் கோவில் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. கும்பாபிஷேகம் செய்யப்பட்ட ராமர் கோவிலை காண்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் அயோத்தியில் திரண்டதால் பரபரப்பு பதற்றமும் ஏற்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் மூன்று லட்சம் பக்தர்கள் ராமர் கோவிலை காண வருகை புரிந்துள்ளனர். மக்கள் கூட்டத்தை அடக்க முடியாமல் காவல்துறை மற்றும் துணை ராணுவம் தடுமாறியது .
இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் யாரும் தற்போது ராமர் கோவிலுக்கு விஜயம் செய்ய வேண்டாம் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய அவர் தற்போது ஸ்ரீராமரை தரிசனம் செய்வதற்காக பொதுமக்கள் அலைக்கடல் என வந்து கொண்டிருக்கின்றனர். அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தற்போது ராமர் கோவிலை தரிசனம் செய்வதால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும் அமைச்சர்கள் ராமர் கோவிலுக்கு தரிசனம் செய்யும் போது பாதுகாப்பிற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதோடு கூட்ட நெரிசலும் ஏற்படும்.
எனவே அமைச்சர்கள் மார்ச் மாதத்திற்கு பிறகு ராமர் கோவிலுக்கு தரிசனம் செய்யுமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார். 500 வருடங்களுக்குப் பிறகு தாய் வீடு திரும்பிய ஸ்ரீராமரைக்கான தேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அலை அலையாக வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் ராமர் கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அரசியல்வாதிகளும் ராமர் கோவிலை தரிசனம் செய்ய செல்லும் போது பாதுகாப்பு மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் மத்திய அமைச்சர்கள் மார்ச் மாதம் ராமர் கோவில் இன்று தரிசனம் செய்து கொள்ளலாம் என பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.