fbpx

அதிமுகவில் திடீர் பரபரப்பு…! பிரதமர் மோடியை சந்திக்கும் ஓ.பன்னீர்செல்வம்…! அடுத்து என்ன…?

தமிழகம் வரும் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளார்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது அணிக்கு நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக திருச்சி வருகிறார். அ.தி.மு.க.வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் திருச்சி விமான நிலையத்தில் மோடியை சந்திக்க பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கியுள்ளது.

திருச்சியில் பல்வேறு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை துவக்கி வைக்கும் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். விமான நிலையத்தில் பிரதமரை ஓ.பி.எஸ் வரவேற்கிறார். நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு பிரதமர் விமான நிலையத்தில் தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தில், பாஜகவுடன் ஏற்பட்ட உரசல் காரணமாக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு, முதல்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அரசு நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் மோடி. அப்போது ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஜகவுடனான உறவை துண்டிக்கும் முடிவில் அக்கட்சி உறுதியாக இருப்பதாக எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் வலியுறுத்திய அதிமுக பொதுக்குழு கூட்டத்தைத் தொடர்ந்து இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றது. இது பழனிசாமிக்கு நெருக்கமான எதிர்க்கட்சி மற்றும் அதன் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Vignesh

Next Post

தூள்...! ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சூப்பர் அறிவிப்பு...! ஊக்கத்தொகை திட்டம் 2025 வரை நீட்டிப்பு...!

Tue Jan 2 , 2024
ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்களுக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் பதவிக்காலத்தை பகுதி திருத்தங்களுடன் ஓராண்டுக்கு மத்திய அரசாங்கம் நீட்டித்துள்ளது. திருத்தப்பட்ட திட்டத்தின் கீழ், 2023-24 நிதியாண்டில் தொடங்கி, மொத்தம் ஐந்து தொடர்ச்சியான நிதியாண்டுகளுக்கு ஊக்கத்தொகை பொருந்தும் என்று கனரக தொழில்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஊக்கத்தொகை அடுத்த நிதியாண்டில் 2024-25 இல் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர் ஐந்து தொடர்ச்சியான நிதியாண்டுகளுக்கான பலன்களுக்குத் தகுதியுடையவராக இருப்பார் என்றும், […]

You May Like