நாளை பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் செல்ல உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2023 மார்ச் 25-ந் தேதி கர்நாடகா செல்ல உள்ளார். காலை 10.45 மணியளவில் சிக்கபல்லபூரில் ஸ்ரீமதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் திறந்துவைக்கிறார். பிற்பகல் 1 மணியளவில் ஒயிட்ஃபீல்டு முதல் கிருஷ்ணராஜபுர வரையிலான பெங்களூரு மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் தொடங்கிவைப்பதுடன், மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்த உதவும் முன் முயற்சியாகவும், இப்பகுதி மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை வழங்கும் நடவடிக்கையாகவும் பிரதமர் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்துவைக்கவுள்ளார்.