fbpx

வங்கியில் வேலை வாய்ப்பு தேடும் நபர்களா நீங்க…? 100-க்கும் மேற்பட்ட பணி இடம்… உடனே விண்ணப்பிக்கவும்….!

பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Officer and Manager பணிகளுக்கு என 103 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 21 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் பட்ட படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியமாக குறைந்தபட்சம் அதிகபட்சம் ரூ.68,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வம் உள்ள நபர்கள் 30.08.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://drive.google.com/file/d/1tTLsB7WfYvCknqhuFNmEY_crc56EX1Rd/view?usp=sharing

Vignesh

Next Post

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி..! என்ன நடக்கப் போகிறது?

Sun Aug 28 , 2022
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில், இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபரா வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் […]
போட்டியை வேறு இடத்திற்கு மாற்றினால் உலகக்கோப்பைக்கு வரமாட்டோம்..!! பாகிஸ்தான் பகிரங்க அறிவிப்பு..!!

You May Like