fbpx

தூள்… அரசு சார்பில் மாணவர்களுக்கு ரூ.10,000 பரிசுத்தொகை… உடனே விண்ணப்பிக்கவும்…! முழு விவரம்

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2024-2025 ஆம் ஆண்டில் 11, 12ஆம் வகுப்பில் பயிலும் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

இது மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2024-2025ஆம் ஆண்டில் 11, 12-ம் வகுப்பில் பயிலும் பள்ளி / கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. 11,12ஆம் வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 21.01.2025 அன்றும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 22.01.2025 அன்றும் தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளன.

கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு தலா முதல் பரிசாக ரூ.10000., இரண்டாம் பரிசாக ரூ.7000 மூன்றாம் பரிசாக ரூ.5000 என வழங்கப்படும். ஒரு பள்ளி & கல்லூரியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் மூன்று மாணவர்களை மட்டும் தெரிவு செய்து உரிய படிவத்துடன் மாணவர்களை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர் அனுப்ப வேண்டும். மாணவர்கள் போட்டி நாளன்று காலை 9.00 மணிக்குள் வருகையைப் பதிவு செய்திடல் வேண்டும்.

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் / கல்லூரி முதல்வரிடமிருந்து உரிய படிவத்தை நிறைவு செய்து போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் கொடுத்திடல் வேண்டும். தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கர்கள் / அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Poetry, essay and speech competitions for school/college students are to be held in Dharmapuri district.

Vignesh

Next Post

சூப்பர்..! உங்களிடம் 5 ஏக்கர் குறைவாக நிலம் இருந்தால் ரூ.15,000 பெறலாம்...! எப்படி தெரியுமா...?

Tue Jan 7 , 2025
If you have less than 5 acres of land, you can get Rs. 15,000.

You May Like