திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் நேற்று மதியம் இளைஞர் ஒருவர் அரிவாளுடன் சுத்தி திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை கோயில் வளாகத்துக்குள் பிரகாரத்தில் அந்த இளைஞர் அரிவாளுடன் சுற்றி திரிந்தார். பின்னர் அங்கிருந்த காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து கோவில் இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த கண்ணாடிகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது சேட்டைகளை பார்த்துக் கொண்டே இருந்த பொதுமக்கள் ஒரு கட்டத்தில் இவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அந்த இளைஞரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி அந்த இளைஞரை கைது செய்தார். அந்த இளைஞரை கைது செய்யும்போது அவர் கையில் வைத்திருந்த அரிவாள் அவரது கையையே பதம் பார்த்ததால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை எடுத்துவிட்டு பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் அந்த நபர். மிகவும் போதையிலிருந்ததால் என்ன செய்வதென்றே தெரியாமல் அது போன்று நடந்ததாக காவல்துறையின் விசாரணையில் தெரிவித்திருக்கிறார் அந்த நபர்.