திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர் .
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதி. இங்கு இயங்கி வரும் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கே பெரும்பாலான இஸ்லாமிய மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பள்ளியின் தாளாளராக குதுபுதீன் நஜீப் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்தப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகளுக்கு தாளாளர் குதுபுதீன் நஜீப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் மாணவிகள் தாளாளர் தங்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கூறி உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவிகளின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து அவர்களது பெற்றோர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் பள்ளிக்கு வந்து மாணவிகளுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருநெல்வேலி மாநகர துணை காவல் துறை ஆணையர் ஸ்ரீனிவாசன் வட்டாட்சியர் ஆனந்த் பிரகாஷ் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிடும் தாளாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக மாணவிகளும் பெற்றோரும் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து தலைமை ஆணையர் அனிதா தலைமையில் விசாரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் குதுபுதீன் நஜீப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும் பள்ளியின் முதல்வர் காதரம்மாள் தாளாளரின் மனைவி முகைதீன் பாத்திமா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர் கைது செய்யப்பட்ட தாளாளருக்கு ஹை கிரவுண்ட் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.