fbpx

15 வருடமாக டிமிக்கி கொடுத்து வந்த கேங்ஸ்டர்! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறை!

15 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி டாட்டடூவினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் தப்பிச்சென்ற ஆறுமுகம் பள்ளிசுவாமி தேவேந்திரா என்ற திருடன் தான் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறான். கடந்த 15 ஆண்டுகளாக தேவேந்திரனை பற்றி எந்த துப்பும் கிடைக்காததால் காவல்துறையினர் விசாரணையை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் ஏதேனும் ஆதாரம் கிடைக்காதா என்பதற்காக அவர்கள் தீவிரமான விசாரணையில் இறங்கினர். அப்போது அவனது கை மணிக்கட்டில் சிலுவையுடன் இதயம் பச்சை குத்தப்பட்டிருந்தது அடையாளமாக குறிப்பிடப்பட்டிருந்தது. வேறு எந்த தகவலும் இல்லை. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு ஆப்களில் கையில் பச்சை குத்தப்பட்டு அடையாளத்துடன் இருக்கும் குற்றவாளிகளை சோதனை செய்தனர்.

அப்போது ஆர்முகம் பள்ளிசாமி முதலியார் என்பவரது அடையாளமும் தேவேந்திரனின் அடையாளமும் ஒரே மாதிரி ஒத்துப்போனது. மேலும் அவர்கள் இருவரது முதல் இரண்டு பெயர்களும் ஒரே மாதிரியாக இருந்தது குடும்ப பெயர்கள் மட்டுமே வேறு மாதிரியாக இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களது கையொப்பத்தை சோதனை செய்த போலிசார் இருவரும் ஒரே நபர் தான் என கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து குஜராத் பகுதியில் ஓட்டுனராக வேலை பார்க்கும் ஆர்முகம் பள்ளிசாமி தேவேந்திரன் என்பவரை 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கைது செய்தனர். இவர் தனது பெயரை மாற்றி பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது. இவரது பெயரில் பல்வேறு காவல் நிலையங்களில் ஐந்து எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும் 15 வருடங்களாக தேடப்பட்டு வரும் குற்றவாளியை டாட்டூ மூலமாக காவல்துறை கண்டுபிடித்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளதோடு பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.

Baskar

Next Post

"அவ்வ்வ்...... நூலிழையில சொதப்பிய திட்டம்".....! சினிமா பாணியில் திட்டம் போட்டு வசமாக சிக்கிய திருடர்கள்!

Fri Mar 24 , 2023
வடிவேலு ஒரு திரைப்படத்தில் போலீஸிடம் மாட்டிக் கொள்ளாமலிருக்க திருடிவிட்டு மிளகாய் பொடியை தூவி விட்டு வருவார். அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்று இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது நகைக்கடையில் திருட முயன்ற இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வள்ளிநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து யுவர் தூத்துக்குடியில் உள்ள கார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். மாரிமுத்துவின் […]

You May Like