தமிழகத்தில் பெரும் ஒரு பிரச்சனையாக பேசப்படுவது மது மற்றும் போதை தான். அடுத்த 6 மாதத்திற்குள் போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு உறுதியாக தெரிவித்திருக்கிறார்.
தற்போது, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகளில் உள்ள பொருட்கள் மீட்கப்பட்டு அந்த அந்த உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனை பாராட்டி இங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள், தமிழகத்தில் விரைவில் அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் உட்பட்ட பகுதிகள் போதைப்பொருட்கள் இல்லாதவையாக மாற்றப்படும் என கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து, அவரது உரையாடலில், அடுத்து ஆறு மாதத்திற்குள் போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்படும். தற்சமயத்தில் கஞ்சா கடத்தல் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்களில் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தப்படுவது தெரியவந்த நிலையில் அதனை தடுக்க ரயில்களில் மோப்ப நாய்கள் பயன்படுத்தி கஞ்சா கடத்தல் தடுக்கப்பட்டு வருகின்றன.” என அவர் தெரிவித்துள்ளார்.