fbpx

2 குழந்தைகள் இருக்கு.. பாய் பிரெண்ட் உடன் தகாத உறவு.. இணையத்தில் லீக் ஆன உல்லாச வீடியோ..!! – அதிர்ச்சியில் காயல்பட்டினம்

கடையநல்லூர் அருகே இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோக்களை பெண்ணின் உறவினருக்கு அனுப்பிய இன்ஜினியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அட்டைக்குளம் பகுதியை சேர்ந்தவர் முசாபுதீன் (29). இன்ஜினியரான இவர், சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணுடன் முசாபுதீனுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஒரே நிறுவனத்தில் பணி புரியும் போது இருவரக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ள காதலாக மாறியது. இந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன.

இருவரும் சென்னையில் பல முறை தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அதனை அப்பெண்ணுக்கு தெரியாமல் முசாபுதீன், செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் வேலையை விட்டுவிட்டு முசாபுதீன் கடையநல்லூருக்கு வந்து விட்டார். அந்தப் பெண்ணும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அதன் பின்னரும் இருவருக்கும் இடையேயான உறவு நீடித்துள்ளது. நெல்லையில் இருவரும் பல முறை சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த விஷயம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே கண்டித்துள்ளனர். இதனால் அந்த பெண், முசாபுதீனை சந்திப்பதை நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த முசாபுதீன், இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அந்த பெண்ணின் உறவினருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார். இதனை பார்த்த உறவினர் அதிர்ச்சியடைந்து அப்பெண்ணிடம் விவரத்தை கேட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து முசாபுதீனை கைது செய்தனர்.

Read more ; திடீரென தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்..!! சார்ஜ் போட்டபோது நேர்ந்த விபரீதம்..!! வாகன ஓட்டிகள் பீதி..!!

English Summary

Police have arrested an engineer near Kadayanallur who allegedly sent pornographic videos of a young woman to her relative.

Next Post

கிரெடிட் கார்டில் உங்களே தெரியாமல் மாயமாகும் பணம்..!! வாடிக்கையாளர்களே ஏமாந்துறாதீங்க..!!

Mon Nov 11 , 2024
Even if a bank advertises that credit cards are free, customers should be aware that those cards come with certain "hidden costs."

You May Like