மணப்பாறையை அடுத்த கே பெரியப்பட்டி பிரிவு சாலையில் திண்டுக்கல் திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உடலில் காயங்களுடனும் வயிற்றில் மருத்துவ குழாய் பொருத்தப்பட்ட நிலையில் உடலில் ஆடைகளின்றி போர்வையால் போர்த்தப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
அந்த நபர் யார் எதனால் இறந்தார் அவரது உடலிலிருக்கும் காயங்கள் எப்படி வந்தது அவருக்கு மருத்துவ குழாய் வயிற்றில் இதற்காக பொருத்தப்பட்டுள்ளது இது போன்ற ஏராளமான கேள்விகள் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களின் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த நபர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஏதேனும் நோயினால் விபத்தினால் இருந்தாரா என்ற எந்த விவரமும் காவல்துறைக்கு தெரியவில்லை. மேலும் அந்த நபர் யார் என்பது போன்ற விபரங்கள் கூட இதுவரை தெரியாத நிலையில் காவல்துறை இந்த வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றது . மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவிற்கு பின்னரே அந்த நபரின் இறப்பிற்கான காரணம் தெரியவரும். அதன் அடிப்படையில் விசாரணையை முன்னெடுக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர் .