fbpx

Woww…! தேர்வு இல்லாமல் காவல்துறையில் வேலை…! எப்படி விண்ணப்பிப்பது.. தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க…

சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்: சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விரும்புவோர் 18 வயது முதல் 50 வயதிற்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம். குற்றப்பின்னனி இல்லாத நன்னடத்தை உடையவர்களாக இருத்தல் வேண்டும். குறிப்பாக சென்னையில் வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும். குடும்ப அட்டை (Ration Card) உடையவராக இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் ஊர்க்காவல் படையினருக்கு, 45 நாட்கள் – தினசரி 1 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த பின்னர் அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் உதவுவதற்கு பணிபுரிய அனுப்பப்படுவர். சலுகைகளாக சீருடை, தொப்பி மற்றும் காலணி ஆகியவைகள் வழங்கப்படும். இரவு ரோந்து பணி, பகல் ரோந்து பணி மற்றும் போக்குவரத்து பணிக்கு ரூ.560/-ம் சிறப்பு படியாக வழங்கப்படும் (பெண்களுக்கு பகல் ரோந்து பணி மட்டும்)

சிறப்பாக பணிபுரிவோருக்கு தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் ஜனாதிபதி பதக்கம் ஆகியவை தகுதி அடிப்படையின் கீழ் வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள், விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரியில் இலவசமாகப் பெற்று பூர்த்தி செய்து நீட்டிக்கப்பட்ட கால அவகாசமான 10.09.2023 மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.

முகவரி: சென்னை ஊர்க்காவல்படை தலைமை அலுவலகம், J-1 சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், அண்ணாசாலை. சைதாப்பேட்டை, சென்னை-15. போன் – 044 2345 2441/ 2442.

Vignesh

Next Post

ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான்கார்டு வைத்திருப்பவரா நீங்கள்..! உடனே இதை பண்ணுங்க.. 30 நாட்களில் சரி ஆகிவிடும்..!

Thu Aug 31 , 2023
பான்கார்டுடன் ஆதார் என்னை இணைக்க வேண்டும் என்று கடந்த 2020-ம் ஆண்டு முதல் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதற்காக பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 30ஆம் தேதியுடன் அந்த அவகாசம் முடிவுற்றது. அந்த தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துள்ளது, அனைவரின் பணியும் பாதியில் முடங்கியது. உங்களிடம் செயலிழந்த பான் கார்டு இருந்தால், அதை செயல்படுத்த ல் ரூ. 1,000 அபராதம் செலுத்த […]

You May Like