கில்லி படத்தில் திரிஷாவுக்கு முறைமாமனாக நடித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறித்த எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகின்றது.
பிரகாஷ் ராஜ் –திரிஷா காம்பினேஷனில் தந்தையாக அபியும் நானும் படத்தில் ஏற்கனவே பார்த்துள்ளோம் . பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மீண்டும் அவர் திரிஷாவுக்கு தந்தையாக நடித்துள்ளார். அதாவது குந்தவை என்ற கதாபாத்திரத்திற்கு தந்தையாக நடிகர் பிரகாஷ் நடித்துள்ளார். இதை நினைவு கூர்ந்து ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
கில்லி திரைப்படத்தில் முத்துப்பாண்டியாக வரும் கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. ’’ ஹாய் செல்லம் ’’ என கூறும் பிரகாஷ் ராஜ் ரசிர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருப்பார். இந்த வீடியோவில் சிலர் தனம் என்ற கதாபாத்திரம் முத்துப்பாண்டியை திருமணம் செய்திருக்கலாம் என மைன்ட் வாய்ஸ் கூறுவது போலவும் கமெண்டுகள் குவிந்து வருகின்றன.
அபியும் நானும் திரைப்படத்தில் தந்தை மகள் கதாபாத்திரத்தில் இருவருமே ரசிக்கக்கூடியவகையில் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். இந்த படத்தையும் குறிப்பிட்டு கமெண்டுகள் செய்து வருகின்றனர். இவை இணையதளத்தில் வைரலாகி கலக்கிக் கொண்டிருக்கின்றது.