fbpx

மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் சீன ஆதரவு கட்சி வெற்றி!

மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் முகமது முய்சுவின் பிஎன்சி கட்சி 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

Maldivian President Muizzu: சமீப காலமாக இந்தியா- மாலத்தீவு நாடுகள் இடையேயேன உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. லட்சத்தீவுக்கு சென்ற பிரதமர் மோடி பகிர்ந்த புகைப்படங்களை மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் கடுமையாக விமர்சித்தனர். மாலத்தீவுக்கு பதிலாக லட்சத்திவுக்கு இந்தியர்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள வேண்டும் என சினிமா பிரலங்கள் பலர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் மாலத்தீவின் 20 -வது நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. 93 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், அதிபர் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) கட்சி 66 இடங்களில் வெற்றி பெற்றது. இது நாடாளுமன்றத்தில் 3 -ல் 2 பங்காகும். முன்னாள் அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் தலைமையிலான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி) 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த மாலத்தீவு அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறவில்லை. ஆனால், இந்த முறை பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதால் முகமது முய்சு அரசுக்கு கூடுதல் பலமாக உள்ளது. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையும், சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் கொண்டவர் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு. இந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு சீன ஆதரவு செயல்பாட்டை அதிகமாக முன்னெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

Next Post

Fox Hill கார் பந்தயம் | ஏழு உயிர்களை காவு வாங்கிய கோர விபத்து! 8 வயது சிறுமி உட்பட 7 பேர் பலி..

Mon Apr 22 , 2024
ஏழு உயிர்களை காவு கொண்ட தியத்தலாவை Fox Hill கார் பந்தயம் பாதுகாப்பான முறையில் நடத்தப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இலங்கையின் ஊவா மாகாணம் பதுளை மாவட்டம் தியத்தலா பகுதியில் நேற்று கார் பந்தயம் நடைபெற்றது. மலைப்பகுதியில் நடைபெற்ற இந்த  கார் பந்தயத்தில் ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் கார் பந்தயத்தைக் காண திரண்டிருந்தனர். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட Fox […]

You May Like