திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டை அடுத்த ஓணான்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 24 நபர்கள் கடந்த 8 அன்று தனியார் சுற்றுலா மினி பேருந்து மூலம் பெங்களூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று சொந்த ஊர் திரும்பி வரும் பொழுது திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சண்டியூர் என்ற இடத்தில் வாகன பழுது காரணத்தினால் தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியன் ஓரத்தில் நிறுத்தி சரி செய்து கொண்டுருந்தனர். சாலையில் பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் திருப்பத்தூரில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்த நபர்களுக்கு ரூ.50,000மும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். அதே போல தமிழக அரசு சார்பில் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.