நாட்டின் சுதந்திர தின விழா நேற்றைய தினம் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வேளாண்மை பணிகளுக்கான ட்ரோன்கள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று கூறினார். முதல் கட்டமாக, 15000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வேளாண்மைக்கான ட்ரோன்கள் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
கிராமங்களில், இரண்டு கோடி பெண்களை லட்சாதிபதியாக மாற்ற வேண்டும் என்பது நம்முடைய கனவு. ஆகவே, அதற்காக பிளம்மிங், எல் இ டி பல்ப் போன்றவற்றை உருவாக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும், லட்சாதிபதி சகோதரிகள் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
அத்துடன், முடி திருத்தும் தொழில் செய்யும் நபர்கள், பொற்கொல்லர்கள், சலவை தொழிலாளர்கள் போன்றோருக்கான திட்டமாக எதிர்வரும் மாதம் விஸ்வகர்மா யோஜனா ஆரம்பிக்கப்படும் என்றும், மலிவான விலையில், ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு அமைத்திருக்கின்ற மக்கள் மருந்தகங்கள் எண்ணிக்கை 10,000லிருந்து, 25,000 என அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.