2024 ஆம் ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பில் ரஷ்யா தலைமை வகிக்க தனது வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபருக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய உயர்மட்ட பரிமாற்றங்களைத் தொடர்ந்து இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான பல பிரச்சினைகளில் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.
இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அவர்கள் சாதகமாக மதிப்பிட்டனர். மேலும், இந்தியா-ரஷ்யா சிறப்பு உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான எதிர்கால முன்முயற்சிகளுக்கான செயல்திட்டத்தை உருவாக்க இருவரும் ஒப்புக்கொண்டனர். பரஸ்பர நலன் கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
2024 ஆம் ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பில் ரஷ்யா தலைமை வகிக்க தனது வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர், இந்தியாவின் முழு ஆதரவையும் தருவதாக உறுதியளித்தார். இரு தலைவர்களும் தொடர்பில் இருக்கவும் ஒப்புக்கொண்டனர்.