fbpx

பயங்கர அலர்ட்…! இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல தடை…! தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

தமிழக கடல்பகுதிகளில் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழ்நாடு மீனவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில்..!! தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..!! எந்தெந்த மாவட்டங்கள்..?

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழக கடற்பகுதிகளில் இன்று முதல் 21-ம் தேதி வரை, மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், மீனவர்களுக்கு தமிழ்நாடு மீனவர் நலத்துறை முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் அறிவுறுத்தபட்டுள்ளது. அனைத்து மண்டல இயக்குனர்களுக்கும் மீன்வளத்துறை இந்த எச்சரிக்கையை வழங்கியுள்ளது.

Vignesh

Next Post

அதிரடி அறிவிப்பு..‌.! ஆசிரியர்களுக்கு இந்த மாதம் இறுதிக்குள்..‌.! பள்ளி கல்வித்துறை உத்தரவு...!

Fri Nov 18 , 2022
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உடனடியாக நிலுவையில் இருக்கும் ஊதியத்தை வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ‘புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 32 கல்வி மாவட்டங்களின் கீழ் வரக்கூடிய அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கருவூலத்தில் சம்பள […]
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! தீபாவளி போனஸ் அறிவிப்பு..!! எவ்வளவு தெரியுமா..?

You May Like