fbpx

‘UG/PG/B.ED’ முடித்தவர்களுக்கு அரசு ஆசிரியர் பணி வாய்ப்பு.! ரூ.40,000/- வரை சம்பளம்.! வாய்ப்பை தவற விடாதீங்க.!

புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனரகத்தில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 407 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி தகுதியும் திறமையும் உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஊதியமாக ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை அரசு விதிகளின்படி வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களது விண்ணப்பத்தினை 23.02.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலமாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு கட்டணங்கள் வசூல் செய்யப்படவில்லை. மேலும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற விவரங்களை அறிய py.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Next Post

U19 World Cup: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா..!

Tue Feb 6 , 2024
15-வது U19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்ச்சமாக லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்களும், ரிச்சர்ட் […]

You May Like