fbpx

காலாண்டு விடுமுறை எதிரொலி… 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு…!

காலாண்டு விடுமுறையையொட்டி, ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; நாளை முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தொடங்க உள்ளது. செப்.28, 29 வார இறுதி நாட்கள் என்பதால் என்பதால் சென்னையில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு செப்.27, 28 தேதிகளில் சென்னை, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 740 பேருந்துகள், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 140 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படும்.

மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 1,100 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வார இறுதி நாட்களில் பயணிக்க சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். அதே நேரம், ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு திரும்புவதற்கு அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

English Summary

Quarterly holiday echoes… Tamil Nadu government decides to operate 1,100 special buses

Vignesh

Next Post

இந்த மரத்தை வழிபட்டால் செல்வ செழிப்புடன் வாழலாம்..!! இந்த 3 ராசிக்காரர்களும் நோட் பண்ணிக்கோங்க..!!

Thu Sep 26 , 2024
Jupiter is considered to be the planet responsible for knowledge, education, intelligence, prosperity and luck.

You May Like