இன்று திருவள்ளூர்,சேலம், நீலகிரி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று சென்னை, காஞ்சிபுரம், வேலூர்,திருவள்ளூர்,சேலம், நீலகிரி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
தலைநகர் சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கோடம்பாக்கம், அம்பத்தூர், போரூர், ஆவடி, பூவிருந்தவல்லி என்ன பல இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.