fbpx

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 9-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், வட உள் தமிழக மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

டெல்லியில் 606 பேருக்கு கொரோனா...! தமிழகத்தில் 273 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது...!

Fri Apr 7 , 2023
தலைநகர் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 606 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வழக்குகள் கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு நேற்று 606 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நேர்மறை விகிதம் 16.98 சதவீதமாக உயர்ந்தது. நகர சுகாதாரத் துறை பகிர்ந்துள்ள தரவுகளின்படி, டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இரண்டு நபர்கள் உயிரெழுத்துவதாக உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.. நாட்டில் […]
ஷாக் நியூஸ்..!! மக்களே 4 பேருக்கு பி.எஃப்.7 கொரோனா தொற்று உறுதி..!! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!!

You May Like