வானவில்லில் இருக்கின்ற ஏழு நிறங்களில், காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை சேர்த்து,உண்பது வானவில் டயட் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கின்ற இந்த வானவில் டயட் வழங்கும் நன்மைகள் பற்றி, தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
நாள்தோறும் பல்வேறு நிறங்களில், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவது தான் வானவில் டயட் என்று சொல்லப்படுகிறது. உடலை ஆரோக்கியமாக வைக்கும் மைக்ரோ, மேக்ரோ ஊட்டச்சத்துக்கள் இந்த வானவில் டயட் மூலமாக உடலுக்கு கிடைக்கிறது.
இப்படி வானவில் டயட் உணவுகளில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கிறது. இந்த உணவுகளை உண்பதால், உடல் எடை குறையும். இந்த வண்ணமயமான உணவு, உடலுக்கு தேவைப்படும் பைடோ கெமிக்கல்ஸை வழங்குகிறது.
இந்த வானவில் டயட் உணவுகளில், இருக்கின்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் சருமத்தை மிருதுவாக வைக்க உதவி புரியும். மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு இந்த டயட்டை மேற்கொள்ளலாம்.