ராஜஸ்தானில் 10 லட்சம் இருந்த ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் மாவட்டத்தில் தபோக் பகுதியில் பாரத் ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் மர்ம கும்ப கும்பல் ஒன்று அங்கு வந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளியை மிரட்டி சிறை பிடித்தனர்.
அப்போது பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்து அதன் பின் மொத்தமாக ஏடிஎம் இயந்திரத்தையே அங்கிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இந்த ஏடிஎம் இயந்திரத்தில் 10 லட்சம் ரூபாய் இருந்ததாக வங்கி நிர்வாகம் கூறியுள்ளது.
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பல் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக காலை பல பொதுமக்கள் வந்து ஏமாற்றத்துடனும், அதிர்ச்சியுடனும் திரும்பி சென்றனர்.